தென்காசியில் தமிழர் விடுதலைக்களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தென்காசியில் தமிழர் விடுதலைக்களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2020 12:14 AM GMT (Updated: 24 Nov 2020 12:14 AM GMT)

தமிழர் விடுதலைக்களம் சார்பில் நேற்று மாலை தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி, 

தமிழர் விடுதலைக்களம் சார்பில் நேற்று மாலை தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் கோரிக்கையான 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும். சுதந்திர போராட்டத்திற்காக போராடிய பெரிய காலாடி என்ற வெண்ணிக்காலாடி நினைவைப் போற்றும் வகையில் அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். நெல்கட்டும்செவலில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும். தென்காசி மாவட்ட அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க முயற்சி செய்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் சுரேஷ் பாண்டியன் (வடக்கு), கட்டபொம்மன் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேய பாண்டியன், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி ஒன்றிய செயலாளர் கணேஷ் பாண்டியன் வரவேற்றார். மாநில தலைவர் ராஜ்குமார் பாண்டியன், மாநில துணைத்தலைவர் சாமி, தென் மண்டல செயலாளர் ஜெயராஜ் பாண்டியன், அமைப்பு துணை செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story