இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி சார்பில் புதிய பஸ்நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி,
தென்காசியில் சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி வக்கீல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேஷ் என்பவர் அவரது அலுவலகத்தில் தென்காசி மேலப்பாறையடி தெருவை சேர்ந்த பாஸ்கர் மற்றும் சிலரால் தாக்கப்பட்டார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் புதிய பஸ்நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தென்காசி நகர தலைவர் நாராயணன், துணை தலைவர் சொர்ண சேகர், நகர செயற்குழு உறுப்பினர்கள் மது, ஜானகிராம், முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story