அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2020 8:47 AM GMT (Updated: 25 Nov 2020 8:47 AM GMT)

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட இணை செயலாளர் காவேரி, மாவட்ட துணை தலைவர் பிரபாகரன், வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு ஊழியர்களிடம் பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்க அரசு அறிவித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story