அதீத மழையிலும் விடாத பணி: சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் பாராட்டு
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர் மழையிலும், விடாமல் பணி செய்து மரங்களை அப்புறப்படுத்தினர்.
சென்னை,
நிவர் புயலின் விளைவாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தது. இதை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர் மழையிலும், விடாமல் பணி செய்து மரங்களை அப்புறப்படுத்தினர்.
இந்த மரம் அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களை முதல்-அமைச்சர் எடப்பட்டி பழனிசாமி பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் நமது மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் அயராது நமக்காக பாடுபடும் அவர்களின் ஈடுபாட்டை கண்டு நான் தலை வணங்குகிறேன்! இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story