மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது


மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
x

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே செருதியூர் தோப்பு தெருவை சேர்ந்த சாம்பசிவம் மகன் சிலம்பரசன் (வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளை மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்திற்குள் கழிவறை அருகே நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்தபோது மோட்டார் சைக்கிளை 2 பேர் திருடி செல்வதை சிலம்பரசன் பார்த்து கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை புதிய வண்ணாரப்பேட்டை சிறியன் மெயின் ரோட்டை சேர்ந்த ஹாஜி முகைதீன் (34) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். தப்பியோடியவர் சென்னையை சேர்ந்த ரகமத்துல்லா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாஜி முகைதீனை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story