விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2020 9:26 AM IST (Updated: 4 Dec 2020 9:26 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க திருப்பூர் மாவட்ட குழு சார்பில் நேற்று கோர்ட்டு ரோட்டில் உள்ள கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்,

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க திருப்பூர் மாவட்ட குழு சார்பில் நேற்று கோர்ட்டு ரோட்டில் உள்ள கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பொன்ராம் தலைமை தாங்கி பேசினார்.

இதில் உறுப்பினர்கள் உதய சூரியன், அமர்நாத், மோகன், கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுதொடர்பான விளம்பர பதாகைகளையும் கைகளில் ஏந்தியபடி பங்கேற்றனர்.

Next Story