விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்-மறியல் மோடியின் உருவபொம்மை எரிப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் சாலைமறியல்- ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மோடியின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.
திருச்சி,
வேளாண் திருத்த சட்ட மசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும் ஆதரவாகவும், இதுபோல், உப்பிலியபுரம் ஐ.ஓ.பி. வங்கியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் முற்றுகையிட்ட 12 பேரை உப்பிலியபுரம் போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று திருவெறும்பூர் பஸ்நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 65 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே அக்கட்சியினர் கையில் பயிர்களை பிடித்து ஏந்தி, கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் சமயபுரம் சாலை அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை முற்றுகையிட முயன்ற 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
உருவபொம்மை எரிப்பு
விவசாய சங்கத்தின் சார்பில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள திருப்பராய்த்துறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வினோத்மணி தலைமையிலும், மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் முன்னிலையிலும் அந்த சங்கத்தினர், மோடி, அம்பானி, ஆகியோரின் உருவபொம்மையை எரித்து சாலைமறியல் செய்தனர். இதுபோல்
மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வட்டச் செயலாளர் ராஜகோபால் தலைமையில் கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டு மோடியின் உருவபொம்மையை எரித்தனர். இதுதொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி கோர்ட்டு வளாகம் முன் வக்கீல்களும், தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story