தர்மபுரியில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு
தர்மபுரியில் தந்தை பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தர்மபுரி,
தர்மபுரியில் பல்வேறு கட்சிகள் சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரியில் உள்ள பெரியார் சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பெரியண்ணன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் குருநாதன், பழனிசாமி, தகடூர் விஜயன், சுமதி, மோகன், கூட்டுறவு பணியாளர் சங்க மாநில செயலாளர் சின் அருள்சாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் நகர பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், தங்கமணி, நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முல்லைவேந்தன், சுருளிராஜன், மோகன், கோமளவள்ளி ரவி, அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ரஹீம், ராஜா, பொன்மகேஷ்வரன், ராஜா, ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் மின்னல் சக்தி, மாவட்ட பொருளாளர் மன்னன், செய்தி தொடர்பாளர் பாண்டியன், நிர்வாகிகள் செந்தில்குமார், சாக்கன் சர்மா, ராமன், அம்பேத்வளவன், தென்பாண்டியன், ராமதுரை, வடிவேல், முல்லை ராணி, காளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் சிவாஜி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் மாநில அமைப்பு செயலாளர் ஊமைஜெயராமன், நகர தலைவர் கருபாலன், நகர செயலாளர் பரமசிவம், மண்டல மாணவரணி தலைவர் செல்லதுரை, மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுதா மணி, மாவட்ட துணைத் தலைவர் கதிர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story