சேலத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி


சேலத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
x
தினத்தந்தி 25 Dec 2020 11:08 PM IST (Updated: 25 Dec 2020 11:08 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரில், எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அ.தி.மு.க.வினர் வெங்கடா ஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சேலம், 

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 33-வது நினைவு நாள் அ.தி.மு.க. சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பூங்காவில் உள்ள மணி மண்டபத்தில் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக 4 ரோடு பகுதியில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா பூங்கா வரை ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்ச்சியில் சக்திவேல் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செல்வராஜ், நடேசன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மாநகர் மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் மயில் வெங்கடேஷ், பகுதி செயலாளர்கள் சண்முகம், தியாகராஜன், சரவணன், முருகன், யாதவ மூர்த்தி, ஜெகதீஷ்குமார், பாண்டியன் உள்பட கூட்டுறவு வங்கி தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

வீரபாண்டி ஒன்றியம் ஆட்டையாம்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.வருதராஜ் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையம் அருகே நடந்த இ்ந்த நிகழ்ச்சியில் கட்சியின் பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் மாதேஷ், எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட மீனவர் அணி பொன்னையன், முன்னாள் பேரூர் செயலாளர்கள் ஜெயபால், செம்புலி கோவிந்தராஜ், இளைஞரணி தலைவர் முருகன், மெடிக்கல் தங்கவேல், சாமி பெருமாள், கலைக்குழு ராதாமோகன், அறிவுமணி, மோகன், மேலத்தெரு தங்கம், ராஜேந்திரன், செல்வம், அங்கமுத்து உள்பட கட்சியினர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story