சின்னசேலம் தாலுகா அலுவலகம் முன்பு ரேஷன் கடை விற்பனையாளர்கள் போராட்டம்


சின்னசேலம் தாலுகா அலுவலகம் முன்பு ரேஷன் கடை விற்பனையாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2020 2:49 PM GMT (Updated: 27 Dec 2020 2:49 PM GMT)

சின்னசேலம் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட ரேஷன்கடை விற்பனையாளர்கள் விற்பனை முனைய கருவிகளை அதிகாரியிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னசேலம், 

தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் சின்னசேலம் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட ரேஷன்கடை விற்பனையாளர்கள் விற்பனை முனைய கருவிகளை அதிகாரியிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். அப்போது விற்பனை முனைய கருவியை இயக்க போதிய இணையதள சேவையின் வேகம் கிடைக்காததால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், தொழில்நுட்ப கோளாறு அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால் பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு சட்ட, ஒழுங்கு பிரச்சனை உண்டாகிறது. எனவே விற்பனை முனைய கருவிகளை அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விற்பனை முனைய கருவிகளை அலுவலகத்தில் ஒப்படைக்க முயன்றபோது அங்கு பணியில் இருந்த குடிமைப்பொருள் தனி தாசில்தார் பாண்டியன் வாங்க மறுத்துவிட்டார். இதையடுத்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் விற்பனை முனைய கருவிகளுடன் திரும்பி சென்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story