டெல்லி போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் செல்வதை தடுக்க அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிப்பு
டெல்லி போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் செல்வதை தடுக்க அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தா.பழூர்,
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து டெல்லிக்கு விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான அமைப்பினர் டெல்லிக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் மற்றும் திருமானூர் பகுதிகள் டெல்டா பாசன பகுதிகளாக இருப்பதால், இந்த பகுதிகளில் இருந்து தஞ்சாவூர் வழியாக விவசாயிகள் மற்றும் ஆதரவு அமைப்பினர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க செல்ல வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீசார் குவிப்பு
போராட்டத்திற்கு செல்பவர்களை தடுக்கும் வகையில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தா.பழூர் பகுதியில் அரியலூர் மாவட்ட எல்லையான மதனத்தூர் சோதனைச்சாவடியில் நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்ட எல்லை பகுதியான திருமானூரில் கொள்ளிடம் பாலத்தில் 35 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story