இந்து கடவுள்களை விமர்சிக்கும் திருமாவளவனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் நாகையில், நடிகை காயத்ரிரகுராம் பேட்டி


இந்து கடவுள்களை விமர்சிக்கும் திருமாவளவனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் நாகையில், நடிகை காயத்ரிரகுராம் பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2021 2:37 AM GMT (Updated: 11 Jan 2021 2:37 AM GMT)

இந்து கடவுள்களை விமர்சிக்கும் திருமாவளவனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என நாகையில், காயத்ரிரகுராம் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் நேற்று நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கட்சியின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் கலந்துகொண்டார். தொடர்ந்து அங்கு உள்ள பெண்களுடன் கலந்து கொண்டு பொங்கலிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

கலாசாரம், பண்பாடு, இலக்கியம் என அனைத்துக்கும் பாரதீய ஜனதா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வேளாண் சட்ட திருத்த மசோதாவால் இடைத்தரகர்களின் குறுக்கீடு இன்றி விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் சுதந்திரம் கிடைக்கும்.

பாடம் புகட்டுவார்கள்

இந்து கடவுளை தொடர்ந்து விமர்சிக்கும் திருமாவளவனுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தி.மு.க.வில் இருந்து அதிகம் பேர் பா.ஜ.க.வில் சேர்ந்து வருகின்றனர். அது ஒரு குடும்ப கட்சி, குடும்ப அரசியலை விட்டு விலகி வர வேண்டும் என பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாவட்ட தலைவர் நேதாஜி, மாநில செயலாளர் வரதராஜன், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story