மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க கூட்டத்தில் தீர்மானம் + "||" + The 27-day protest in Thiruvarur against various demands was organized by the AITUC. Resolution of the Association Meeting

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க கூட்டத்தில் தீர்மானம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க கூட்டத்தில் தீர்மானம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருகிற 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஏ.ஐ.டி.யூ.சி. சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னார்குடி,

ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்க கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு நிர்வாகி புஷ்பநாதன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், மாநில செயலாளர் கலியபெருமாள், கோவிலூர் கிடங்கு பொறுப்பாளர்கள் சங்கர், சிவசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ஆகிய தாலுகாவை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் குறிச்சி ராஜாராமன், ஒரத்தூர் அறிவழகன், நல்லூர் இருதயராஜ், கெழுவத்தூர் வீரசேகரன், கூத்தாநல்லூர் சூரியமூர்த்தி, கீழப்பாலம் ரவி, 57 குல மாணிக்கம் செங்கொடி, நீடாமங்கலம் செருவாமணி பிச்சைக்கண்ணு, திருத்துறைப்பூண்டி சபாபதி ஆகியோர் பணியின் போது இறந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் சங்கத்தின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் இதுவரை 984 குடும்பங்களுக்கு ரூ.96 லட்சத்து 60 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு எடைகூலியும், ஏற்றுக்கூலியும் சேர்த்து தனியாருக்கு இணையாக மூட்டைக்கு ரூ.15 கூலி வழங்க வேண்டும். பெரிய அளவிற்கு நெல் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் சாக்கு, சணல், இடவசதி ஆகிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். பணியின்போது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை செலவை அரசே ஏற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி திருவாரூர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்: கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் தமிழக கவர்னர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. தமிழக சட்டமன்றத் தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதி வழங்கும் கட்சியுடன் கூட்டணி மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று திருச்சியில் நடந்த தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. 5 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பொங்கல் பண்டிகை முடிந்ததும் 5 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை பெற வேண்டும் கோட்டூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை
வளர்ச்சி பணிகளை ேமற்கொள்ள தேவையான நிதியை பெற வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
5. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க பெற்றோர் ஆதரவு கருத்து கேட்பு கூட்டத்தில் தகவல்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர்.