10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: ‘பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது’


10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: ‘பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது’
x
தினத்தந்தி 12 Jan 2021 10:53 PM GMT (Updated: 12 Jan 2021 10:53 PM GMT)

10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: ‘பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

திருவொற்றியூர், 

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;-

வேளாண் திருத்த சட்டம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு தான். வேளாண் சட்டம் தொடர்பாக ஏற்கனவே விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதை முதல்-அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு பற்றி சாதி வாரி கணக்கெடுப்பு முடிந்து அரசிற்கு அறிக்கை அளித்த பின்னர் தான் முடிவு செய்யப்படும்.

தி.மு.க.வில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. அக்கட்சியில் பிரச்சினை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.

10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தொடர்பாக தீவிரமாக யோசித்து தான் முடிவு செய்யப்பட்டதாக கூறிய அவர், சுகாதாரத்துறை அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.


Next Story