மாவட்ட செய்திகள்

சினிமா கேளிக்கை வரி ரத்து குறித்து முதல்-அமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி + "||" + Interview with Minister Kadambur Raju

சினிமா கேளிக்கை வரி ரத்து குறித்து முதல்-அமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

சினிமா கேளிக்கை வரி ரத்து குறித்து முதல்-அமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
சினிமா கேளிக்கை வரி ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெவித்தார்.
கோவில்பட்டி, 

கொரோனா காலத்தையொட்டி திரையரங்குகள் இயங்காமல் இருந்தபோது, எந்த வரியும் விதிக்கப்படவில்லை. கேளிக்கை வரியை ரத்து செய்வது குறித்த திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் நல்ல முடிவை அறிவிப்பார்.

பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முறைப்படுத்தப்பட்ட கட்டணம் தான்வாங்க வேண்டும் என்பது அரசின்விதி. அதைமீறி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தட்கல் டிக்கெட்

திரையரங்குகளில் தட்கல் டிக்கெட் வழங்கும் முறையை செயல்படுத்துவது தொடர்பாக, முதல்-அமைச்சரின் ஆலோசனையின்பேரில் நான், வணிகவரித்துறை அமைச்சர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.

தட்கல் டிக்கெட் எவ்வளவு நிர்ணயம் செய்யலாம் என திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடமும் கேட்டுள்ளோம். இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. கூடிய விரைவில் திரையரங்குகளுக்கான தட்கல் டிக்கெட் முறை அமல்படுத்தப்படும்.

கமல்ஹாசன் மீது பாய்ச்சல்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததற்கு ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக ஏதேதோ சொல்கிறார். அ.தி.மு.க. நல்லாட்சி வழங்கியதால்தான் 1977-ல் இருந்து 10 முறை தேர்தலை சந்தித்து, அதில் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. நல்லாட்சி வழங்கியதால் தான் மக்கள் ஆட்சிக்கு கொண்டு வருகின்றனர். மக்களை ஏமாளிகள், விவரமில்லாதவர்கள் என கூறுகிறாரா?. நடைபெறவுள்ள தேர்தல், கமல்ஹாசனுக்கு தக்கபாடத்தை புகட்டி, அரசியலுக்கு லாயக்கில்லை என மக்களால் விரட்டப்படக்கூடிய தேர்தலாக அமையும். இவரை மக்கள் விரும்பி அரசியலுக்கு அழைத்தனரா?. அரசியல் கட்சி தொடங்கிதற்கு ஒரு சாக்குபோக்கு சொல்ல வேண்டும். இந்த தேர்தல் கமல்ஹாசனுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரத்தில் பொதுக்கூட்டம்: அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதியும், வளர்ச்சியும் பெற்றுள்ளது அமைச்சர் பெருமிதம்
அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதியும், வளர்ச்சியும் பெற்றுள்ளது என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
2. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராவார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு
234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராவார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
3. மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
4. அரசு விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் பேட்டி
அரசு விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் கூறினார்.
5. கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் கூறினார்.