மாவட்ட செய்திகள்

அலுவலகம் சூறையாடப்பட்டதை கண்டித்து - பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + Condemned the looting of the office - BJP-in demonstration

அலுவலகம் சூறையாடப்பட்டதை கண்டித்து - பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

அலுவலகம் சூறையாடப்பட்டதை கண்டித்து - பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மதுரையில் பா.ஜ.க. அலுவலகம் சூறையாடப்பட்டதைக் கண்டித்து மதுரையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை,

மதுரை மேலமடை பகுதியில் அமைந்துள்ள புறநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அலுவலகத்தில் இருந்த இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அலுவலகத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி மதுரை மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அண்ணாநகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மகளிரணி நிர்வாகி மகாலட்சுமி, மேலூர் இப்ராகிம், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் பரபரப்பு: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் முயற்சி - மோதல் ஏற்படும் சூழலால் போலீஸ் குவிப்பு
அரியலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 2 கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.