மாவட்ட செய்திகள்

அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் + "||" + Agricultural law copy burning protest in Avinashi

அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
அவினாசியில் நேற்று சேவூர் செல்லும் ரோட்டில் பல்வேறு கட்சியினர் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி, 

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக புதிய வேளாண் திருத்த மசோ தாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதனை கண்டித்தும், மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தியும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பல நாட்களாக தலைநகர் டெல்லியில் முகாமிட்டு பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போகிப்பண்டிகையை திருநாளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரித்து கண்டன கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி நிர்வாகிகள்

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸடு் கட்சி சார்பில் பி.முத்துச்சாமி, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் இஷாக், ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன், செல்வராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் வக்கீல் கோபாலகிருஷ்ணன், மணி,ம.தி.மு.க. சார்பில் சுப்பிரமணி, பாபு, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி சார்பில் லோகநாதன், ராஜ்குமார், தி.மு.க.சார்பில் பழனிச்சாமி, பொன்னுச்சாமி, பால்ராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள்- பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகை அருகே அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள்-பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அழுகிய நெற்பயிர்களுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது
திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அழுகிய நெற்பயிர்களுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி போராட்டம்
திருச்சி சங்கிலியாண்டபுரம் சுப்பையாத்தெரு விரிவாக்கம் பகுதியில் அஸ்வின்நகர் உள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் சூழந்துள்ளது.
5. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தில் பேச்சுவார்த்தையை மீறியதாக விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.