ராசிபுரம், பரமத்திவேலூர் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ராசிபுரம், பரமத்திவேலூர் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2021 4:53 AM GMT (Updated: 14 Jan 2021 4:53 AM GMT)

ராசிபுரம், பரமத்திவேலூர் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராசிபுரம், 

பெண்களை பற்றி தவறாக பேசியதாக தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மங்களபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தலைவரும், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான இ.கே.பொன்னுசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிலிங்கம் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் பொன் அரவிந்தன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பேரூர், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ராசிபுரம் அருகே மெட்டாலாவில் கண்டன ஆர்ப்பாட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.எஸ்.சரவணன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி, நாமகிரிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் உள்பட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்‌ நடைபெற்றது. வேலூர் ‌பேரூராட்சி‌ முன்னாள்‌ தலைவர்கள் ‌பொன்னிமணி (எ) சுப்ரமணியம், வேலுச்சாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ‌ராஜமாணிக்கம் ஆகியோர் ‌முன்னிலையில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பிரமுகர் சங்கர், அரசு வழக்கறிஞர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாராயணன் தலைமையில்‌‌ பொத்தனூர் நான்கு‌ ரோடு அருகே கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.‌‌ ஆர்ப்பாட்டத்தில் ‌பொத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் வரதராஜன், வேலூர் நிலவள வங்கி தலைவர் மாரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதே‌ போல் ‌‌பாண்டமங்கலம்‌ எம்.ஜி.ஆர் சிலை‌ அருகே ‌கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ‌மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன், கபிலர்மலை‌‌ தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர்கள்‌‌ செல்வராஜ், ரவீந்திரன் ‌உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பரமத்தியில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story