மாவட்ட செய்திகள்

சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம் + "||" + Women wearing white sarees at Pongal near Sivagangai; A cane is auctioned for Rs 35,000 and a lemon for Rs 15,000

சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்

சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்
சிவகங்கை அருகே மதகுபட்டி கீழத்தெரு, மேற்குத்தெரு, சலுகைபுரம் பகுதிகளில் அதிகளவில் ஒரு சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
மாட்டு பொங்கல் அன்று அம்மனுக்கு பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தொட்டில் கரும்பு கட்டினர். விழா முடிந்ததும் மாலையில் கீழத்தெருவில் நேர்த்திக்கடன் கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவை ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.கரும்பு, எலுமிச்சையை ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் அவற்றை போட்டி போட்டு கொண்டு ஏலம் எடுத்தனர். இதில் ஒரு கரும்பு அதிகபட்சமாக ரூ.35,001-க்கும், ஒரு எலுமிச்சை ரூ.15,100-க்கும் ஏலம்போனது.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறியதாவது:-

எங்கள் தெய்வங்களுக்கு முன்பு ஏழை, பணக்காரர் என வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதற்காக அணிகலன்கள் அணியாமல் ஒரே மாதிரியாக உடையணிந்து பொங்கல் வைப்போம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே விரதம் இருக்க தொடங்கி விடுவோம். ஏலம் எடுப்போருக்கு நினைத்த காரியம் நடப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பரமத்திவேலூரில் ரூ9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்.
2. ஈமு கோழி வளர்ப்பதாக ரூ.200 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன சொத்துகளை ஏலம் விட கோர்ட்டு அனுமதி
ஈமு கோழி வளர்ப்பதாக ரூ.200 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன சொத்துகளை ஏலம் விட கோர்ட்டு அனுமதியளித்துள்ளது.
3. கொங்கணாபுரத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்.
4. சிவகங்கையில் குடியரசு தின விழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்
சிவகங்கையில் குடியரசு தின விழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
5. சிவகங்கையில் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.