குப்பை தொட்டி அருகே வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு


குப்பை தொட்டி அருகே வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 1 Feb 2021 5:14 AM GMT (Updated: 2021-02-01T10:44:57+05:30)

குப்பை தொட்டி அருகே வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

பொன்னேரி, 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் கிராமம் அருகே வேண்பாக்கம் துணை மின்நிலையம் உள்ளது. இதன் அருகே தடப்பெரும்பக்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

இதன் கீழே உள்ள ஊராட்சி குப்பை தொட்டியின் அருகே பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை சுத்தம் செய்யாமல் இருப்பதை பார்த்த கிராம மக்கள் அந்த பகுதி வார்டு உறுப்பினர் மற்றும் தடப்பெரும்பக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தனர்.

உயிருடன் மீட்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் பாபு பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று டாக்டரிடம் ஒப்படைத்து குழந்தையின் விவரங்களை தெரிவித்தார்.

அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அந்த குழந்தையை தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story