பொதுமக்கள் தர்ணா போராட்டம்


பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

பெரணமல்லூர் ஒன்றியம் செப்டாங்குளம் மற்றும் நம்பேடு கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 50-க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர்  அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

அந்த மனுவில், நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். வடுகமங்கலம் மற்றும் செப்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 மிகப் பெரிய கல்குவாரி இயங்கி வருவதால் நாங்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறோம். தொடர்ந்து 3-வது கல்குவாரி அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. எனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதிப்பு ஏற்படுத்தும் கல்குவாரி மனுவை நிரந்தமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

---

Next Story