சாத்தூர் ரெயில்வே பீடர் ரோட்டில், யாரையும் பாதிக்காத வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்


சாத்தூர் ரெயில்வே பீடர் ரோட்டில், யாரையும் பாதிக்காத வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Feb 2021 12:58 AM GMT (Updated: 8 Feb 2021 12:58 AM GMT)

சாத்தூர் ரெயில்வே பீடர் ரோட்டில் யாரையும் பாதிக்காத வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

போக்குவரத்து நெரிசல் 
ெரயில்வேபீடர் ரோட்டில் ெரயில்வே கேட் மூடப்படுவதால் அதிக நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. 
இதனால் இந்த சாலையினை பயன்படுத்தும் அம்மாபட்டி, ராமலிங்கபுரம், கோட்டூர், இருக்கன்குடி, நென்மேனி, புதூர், நகலாபுரம் பந்தல்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆலோசனை கூட்டம் 
 சாத்தூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான ெரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. 
இந்தநிலையில் ெரயில்வே பீடர் ரோட்டில் கட்டப்படும் மேம்பாலம் குறித்தும் இதனால் வியாபாரிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்  சாத்தூரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நகரத்தலைவர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர்  ஜெயச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் விவேகானந்தன், மாதவன், சாத்தூர் அ.தி.மு.க. நகர செயலாளர் இளங்கோவன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாமோதரன், சந்திரசேகர், காமராஜ், தேவேந்திர குல சங்க தலைவர் கருப்பையா, ெரயில்வே பீடர் ரோடு சங்க தலைவர் நாகராஜ் மற்றும் வியாபாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

மாற்றுப்பாதை 
கூட்டத்தில் ெரயில்வே மேம்பாலம் வியாபாரிகளை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பாதிப்பு ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் மற்றும் மாற்றுப்பாதைகள் அமைக்க ஏதேனும் வழி உள்ளதா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. 

இதுகுறித்து தங்களது ஆலோசனை மற்றும் கருத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளதாகவும் சங்கத்தினர் கூறினர்.

Next Story