மாவட்ட செய்திகள்

தென்காசியில் 4 பேருக்கு கொரோனா + "||" + Four new cases of corona infection have been reported in Tenkasi.

தென்காசியில் 4 பேருக்கு கொரோனா

தென்காசியில் 4 பேருக்கு கொரோனா
தென்காசியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 8 ஆயிரத்து 516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 324 பேர் வீடு திரும்பி உள்ளனர். 34 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 159 பேர் இறந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். நேற்றுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 710-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 443 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 53 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 214 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 341 ஆக உள்ளது. இதில் 16 ஆயிரத்து 179 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 19 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 143 பேர் இறந்து உள்ளனர்.