மாவட்ட செய்திகள்

மின்சார ரெயில் மோதி பெண் பலி + "||" + Woman killed in electric train collision

மின்சார ரெயில் மோதி பெண் பலி

மின்சார ரெயில் மோதி பெண் பலி
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் அல்லிராணி மீது மோதியது. இதில் அல்லிராணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
சென்னை, 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அல்லிராணி (வயது 50). இவரது மகள் சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அல்லிராணி தனது மகளை பார்பதற்காக சென்னை வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை கிண்டி ரெயில் நிலையத்துக்கு அவர் வந்துள்ளார். அப்போது தண்டவாளத்தை கடக்கும் போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் அல்லிராணி மீது மோதியது. இதில் அல்லிராணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம் உள்ளது.
2. ஈராக் ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல்; துருக்கி வீரர் பலி
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.
3. ஓமனில் ஒரே நாளில் 1,335 பேருக்கு கொரோனா; 9 பேர் பலி
ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.
4. பெருவில் பஸ் சாலையில் கவிழ்ந்து 20 பேர் பலி
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது.
5. முத்துப்பேட்டை அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
முத்துப்பேட்டை அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி.