திருச்செங்கோடு அருகே ரிக் வண்டி மேலாளர் வீட்டில் நகை திருட்டு
திருச்செங்கோடு அருகே ரிக் வண்டி மேலாளர் வீட்டில் நகை நகைகளை திருடி சென்று விட்டனர்.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு அருகே குட்டிமேய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). ரிக் வண்டி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து திருச்செங்கோடு ரூரல் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story