நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா


நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 26 Feb 2021 7:00 PM IST (Updated: 26 Feb 2021 7:00 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மன்னார்குடி, 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நன்னிலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொல்லுமாங்குடி கடைத்தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

மன்னார்குடி

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் மன்னார்குடி தெற்குவீதி சந்திப்பில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கா.தமிழ்ச்செல்வம், முன்னாள் நகரசபை தலைவர் சுதாஅன்புசெல்வன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அ.தி.மு.க.வினர் கோபாலசமுத்திரம் கீழ வீதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.

அ.ம.மு.க.

மன்னார்குடியில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.ம.மு.க. சார்பில் மன்னார்குடி தெற்குவீதி சந்திப்பில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு தலைவர் கு.சீனிவாசன், மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் எஸ்.சத்தியமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் இளவரசி இளையராஜா, மன்னார்குடி நகர செயலாளர் ஏ.ஆர்.ஆனந்தராஜ், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரெங்கராஜ், மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் க.அசோகன், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.கே.அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story