சென்னையில் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் மாற்றம்


சென்னையில் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் மாற்றம்
x
தினத்தந்தி 27 Feb 2021 5:26 PM IST (Updated: 27 Feb 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், மாற்றப்பட்டனர். இது தொடர்பான உத்தரவை டி.ஜி.பி.திரிபாதி பிறப்பித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ஜெயகரன் சாமுவேல் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். தியாகராயநகர் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ஸ்டீபன் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் ராஜன் பொறுப்பு ஏற்கிறார்.

பூக்கடை போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் அமுல்தாஸ் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சம்பத்பாலன் பதவி ஏற்பார். திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ஹிட்லர் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் ஜோசப் பொறுப்பு ஏற்பார். 

கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ஜூலியஸ் கிறிஸ்டோபர் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் ரவிச்சந்திரன் பதவி ஏற்கிறார். பரங்கிமலை போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜகோபால் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் சக்திவேல் பொறுப்பு ஏற்பார்.

சென்னை பல்லாவரம் உதவி கமிஷனராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்பேடு உதவி கமிஷனராக ரமேஷ்பாபு, கிண்டி உதவி கமிஷனராக பாண்டி ஆகியோர் பொறுப்பு ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரம் டி.எஸ்.பி.யாக குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story