கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதி மீறல்; திருமண மண்டபத்திற்கு சீல்

கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதி மீறல்; திருமண மண்டபத்திற்கு சீல்
x
தினத்தந்தி 1 March 2021 4:05 AM IST (Updated: 1 March 2021 4:05 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதி மீறலை தொடர்ந்து திருமண மண்டபத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கொளத்தூர்:
கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதி மீறலை தொடர்ந்து திருமண மண்டபத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல்
கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட மாநாடு நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டை விதிமீறலாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கருதினர். 
சீல் வைப்பு
எனவே மாநாடு நடந்த திருமண மண்டபத்தை மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன் தலைமையிலான மேட்டூர் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

Next Story