நெல்லையில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லையில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
நெல்லை சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த பெருமாள் (39), சேதுராயன்புதூர் கம்மாளங்குளத்தை சேர்ந்த ஆதி நாராயணன் (29), மேல புத்தனேரி பாறை குளத்தை சேர்ந்த பிச்சுமணி (33). இவர்கள் 3 பேரையும் கொலை வழக்கு தொடர்பாக மானூர் போலீசார் கைது செய்தனர்.
இவர்களின் தொடர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இதை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து பெருமாள், ஆதிநாராயணன், பிச்சுமணி ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான ஆணையை அவர்கள் அடைக்கப்பட்டுள்ள திருச்சி மத்திய சிறையில் மானூர் போலீசார் சமர்ப்பித்தனர்.
மணல் திருட்டு
இதுதவிர நெல்லை அருகே உள்ள மேலபாலாமடையை சேர்ந்தவர் அய்யப்பன் (37). இவரை கல்லிடைக்குறிச்சி போலீசார் மணல் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.
இவர் தொடர் மணல் திருட்டு செயலில் ஈடுபட்டு வந்ததால் கலெக்டர் உத்தரவுப்படி, குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story