ஊத்துக்கோட்டையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்


ஊத்துக்கோட்டையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 21 March 2021 12:49 PM GMT (Updated: 21 March 2021 12:49 PM GMT)

நிவர் மற்றும் புரவி புயல்கள் காரணமாக சில மாதங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் இடையே பல பகுதிகளில் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது.

குறிப்பாக ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயையொட்டி சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை பள்ளத்தில் தவறி விழுந்து வாகன ஓட்டிகள் 13 பேர் பலத்த காயமடைந்தனர்.

பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பேத்கர்நகர் வாழ் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமார் தன் சொந்த செலவில் நேற்று சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் குமாருக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story