புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்


புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
x
தினத்தந்தி 28 March 2021 10:31 PM GMT (Updated: 28 March 2021 10:31 PM GMT)

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது.

புளியங்குடி, மார்ச்:
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அழைப்பு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சுவாமி வீதிஉலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. தேர் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலையை வந்து அடைந்தது. மாலை 6 மணிக்கு திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சியும், திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தேர் திருப்பணிக்குழு தலைவர் சங்கரநாராயணன், கோவில் நிர்வாக அதிகாரி கணேஷ்குமார், தக்கார் சாந்தி, அறங்காவலர்துறை ஆய்வாளர் லதா, பி.டி.சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சாமிநாதன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் செய்திருந்தனர். 

Next Story