வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை


வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை
x
தினத்தந்தி 3 April 2021 1:25 AM GMT (Updated: 3 April 2021 1:25 AM GMT)

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை.

திருவள்ளூர், 

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் பரிசு பொருட்களை கண்காணிக்கவும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இதனை அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, கடம்பத்தூர், மப்பேடு, கொட்டையூர், பண்ணூர் போன்ற பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த கடம்பத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) உதயசங்கர் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டேனியல் சுரேஷ், ருக்மணிதேவி மற்றும் ராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை வீடியோ பதிவும் செய்தனர்.

Next Story