மாவட்ட செய்திகள்

ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Police crackdown on youth murder gang in Otteri

ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓட்டேரியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திரு.வி.க. நகர், 

சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 3-வது தெருவில் நேற்று இரவு 7 மணியளவில் வாலிபர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஓட்டேரி மற்றும் தலைமைச்செயலக காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ டிரைவர்

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலையான வாலிபர், ஓட்டேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மதன் (வயது 30) என்பது தெரியவந்தது. மதன் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் காய்கறி விற்பனையும் செய்து வந்துள்ளார். இவருக்கு விஜி என்ற மனைவியும், கண்ணா என்ற மகனும் உள்ளனர்.

மேலும் மதன் மீது ஏற்கனவே தலைமை செயலக காலனி போலீசில் 1 கொலை வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மதனை கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பல் யார்? எதற்காக மதன் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நியமித்துள்ளார்.
2. காதல் திருமணம் செய்ததில் முன்விரோதம்: சென்னை என்ஜினீயர் குத்திக்கொலை மைத்துனர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
காதல் திருமணம் செய்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சென்னை என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
4. பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்கள் பீதி அடைய வேண்டாம்; போலீஸ் கமிஷனர் கமல்பந்த்
பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
5. தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டிக்கேட்ட கணவன்-மனைவி உள்பட 3 பேரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு
தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டிக்கேட்ட கணவன்-மனைவி உள்பட 3 பேரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.