சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி


சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 5 April 2021 9:04 PM GMT (Updated: 5 April 2021 9:06 PM GMT)

திண்டுக்கல்லுக்கு மைசூரில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது.

திண்டுக்கல் :

திண்டுக்கல் பழனி பைபாஸ் ரோடு, தாடிக்கொம்பு ரோடு பகுதிகளில் தரகுமண்டி செயல்பட்டு வருகின்றன. 

இந்த தரகு மண்டிகளுக்கு திண்டுக்கல்லின் சுற்றுப்புற பகுதிகள், திருப்பூர், தாராபுரத்திலிருந்து சின்ன வெங்காயமும், மராட்டியம் உள்பட வட மாநிலங்களில் இருந்து பல்லாரியும் விற்பனைக்கு வருகிறது. 

கடந்த மாதம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

அதன்பிறகு விலை குறைந்து ரூ.35 முதல் ரூ.50 வரையில் விற்பனையானது. 

இந்நிலையில் மேலும் விலை குறைந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.42 வரையில் விற்பனை ஆனது. 

மைசூரில் இருந்து சின்ன வெங்காயம் வரத்தாகிறது. திண்டுக்கல்லுக்கு மட்டும் சுமார் 17 டன் சின்ன வெங்காயம் மைசூரில் இருந்து விற்பனைக்கு வந்தது. 

அதனால் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்தது. 

இதேபோல் சுமார் 300 டன் பல்லாரி விற்பனைக்கு வந்தது.

 இதையொட்டி பல்லாரி விலை குறைந்து கிலோ ரூ.7 முதல் ரூ.20 வரையில் விற்பனையானது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story