மாவட்ட செய்திகள்

கே.வி.குப்பம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல் + "||" + Villagers block the road

கே.வி.குப்பம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

கே.வி.குப்பம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
கே.வி.குப்பம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அடுத்த அன்னங்குடி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களும், பெண்களும் பஸ்நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகளும் யாரும் வராததால் அவர்களே சிறிது நேரத்தில் போராட்டத்தை கைவிட்டனர். அதிகாரிகள் தலையிட்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்கா விட்டால் மீண்டும் ஒரு நாளில் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என்று போராட்டத்திற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.