மாவட்ட செய்திகள்

2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை + "||" + 2 teenagers with a bottle of wine Stabbing

2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை

2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை
அரக்கோணம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.
அரக்கோணம்

அரக்கோணம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் மது பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

மது பாட்டிலால் குத்தினர்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த சித்தம்பாடி அருகே நேற்று இரவு சோகனூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன் (வயது 20), செப்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா (25) உள்பட சிலர் கும்பலாக மது போதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிலர் அர்ஜூன், சூர்யா ஆகிய இருவரையும் மது 
பாட்டிலால் குத்தியதாக கூறப்படுகிறது. 

பலத்த காயம் அடைந்த இருவரையும் உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
2 வாலிபர்கள் சாவு

அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜ் விரைந்து சென்று பார்வையிட்டு, இருவரையும் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.