ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு


ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு
x
தினத்தந்தி 7 April 2021 8:36 PM GMT (Updated: 9 April 2021 12:20 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளிலும் 69.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளிலும் 69.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

வாக்குப்பதிவு 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 4 தொகுதிகளிலும் 5 லட்சத்து 79 ஆயிரத்து 908 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 85 ஆயிரத்து 189 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரத்து 160 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 
இவர்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 551 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 32 ஆயிரத்து 67 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 8 லட்சத்து 10 ஆயிரத்து 625 பேர் வாக்களித்துள்ளனர். இது 69.60 சதவீதம் ஆகும். 

சதவீதம் 

பரமக்குடி தொகுதியில் 85 ஆயிரத்து 34 ஆண் வாக்காளர்களும், 95 ஆயிரத்து 431 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 468 பேர் வாக்களித்துள்ளனர். இது 70.51 சதவீதம் ஆகும். திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 91 ஆயிரத்து 956 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 987 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 945 பேர் வாக்களித்துள்ளனர். இது 68.77 சதவீதம் ஆகும்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 98 ஆயிரத்து 557 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 580 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 138 பேர் வாக்களித்துள்ளனர். இது 68.77சதவீதம் ஆகும். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 4 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 69 பெண் வாக்காளர்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 74 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 70.38 சதவீதம் ஆகும். 

பெண்களே அதிகம் 

இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். குறிப்பாக ராமநாதபுரம். திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் ஆண்களை விட அதிகளவில் பெண்களே வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story