மாவட்ட செய்திகள்

விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு + "||" + Worship of women with lanterns

விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு

விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு
வத்தலக்குண்டு செல்வபகவதி அம்மன் கோவிலில் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு பெத்தானியாபுரத்தில் செல்வபகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 நாள் திருவிழா நடந்தது. முதல் நாளில் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 2-வது நாளில் ஊர்காவலன் காவு வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவிழாவின் 3-ம் நாளான நேற்று விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர். இதனையடுத்து கோவில் முன்பு ஏராளமான பெண்கள் தரையில் அமர்ந்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். 

மாலையில், பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.