தொழிலாளி வெட்டிக்கொலை
ஒத்தக்கடை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
புதூர்,
ஒத்தக்கடை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தொழிலாளி கொலை
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே அயிலங்குடி கிராமத்திற்கு வெளியே ரோட்டோரம் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்று காலை விவசாய வேலைக்கு சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அயிலங்குடி கிராமத்தை சேர்ந்த அம்மாவாசை(வயது 48) என்பது தெரிய வந்தது. இவர் விவசாய கூலி தொழிலாளியாகவும், பந்தய மாடுகளை வளர்த்து வந்தும் வந்து உள்ளார்.நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
முன்விரோதம் காரணமா?
பந்தய மாடு வளர்ப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அம்மாவாசைக்கு ஒரு மனைவியும், 4 பிள்ளைகளும் உள்ளனர்.
இது குறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story