‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற விவகாரம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட என்ஜினீயர் உள்பட 4 பேருக்கு போலீஸ் சம்மன்


‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற விவகாரம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட என்ஜினீயர் உள்பட 4 பேருக்கு போலீஸ் சம்மன்
x
தினத்தந்தி 9 April 2021 12:49 AM GMT (Updated: 9 April 2021 12:49 AM GMT)

சென்னை வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பணியாளர்கள் 3 ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் நடத்திய விசாரணையில் அது வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படாதவை என தெரியவந்தது.எனினும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய உதவி என்ஜினீயர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி துப்புரவு மேஸ்திரி வேளாங்கண்ணி, துப்புரவு ஊழியர் சரவணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட என்ஜினீயர் செந்தில்குமார், துப்புரவு மேஸ்திரி வேளாங்கண்ணி, துப்புரவு ஊழியர் சரவணன் மற்றும் தற்காலிக தொழிலாளி வாசுதேவன் ஆகியோரை வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) காலை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வேளச்சேரி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

 


Next Story