சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு
திருவாரூர் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே முடிகொண்டான் கிராமம் ெரயிலடி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 55). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி குடிபோதையிலிருந்த குமார், 11 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
அப்போது சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து குடிபோதையில் இருந்த குமாரிடமிருந்து சிறுமியை காப்பாற்றி, சிறுமியின் தாயிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
5 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு கூறினார்.
இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து குமார் திருச்சி மாவட்டம் மணப்பாறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மல்லிகா ஆஜரானார்.
Related Tags :
Next Story