குடியாத்தம் அருகே; 15 காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்
குடியாத்தம் அருகே 15 காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. அதில் மா, நெல், வாழையை சேதப்படுத்தின.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே 15 காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. அதில் மா, நெல், வாழையை சேதப்படுத்தின.
காலதாமதமாக வந்த வனத்துறையினர்
குடியாத்தம் வனப்பகுதியில் காட்டு யானைகள் ெதாடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று இரவு 9 மணியளவில் கொட்டமிட்டா மலைப்பகுதி வழியாக 10 காட்டுயானைகள் கூட்டமாக வந்து வனப்பகுதியையொட்டி உள்ள மாந்தோப்புக்குள் புகுந்து மா மரக்கிளைகளை உடைத்து நாசம் செய்தன.
அங்குள்ள சீதாபதி, ராஜகோபால், முருகன், லட்சுமணன், பத்மநாபன் ஆகியோரின் மாந்தோப்புக்குள் புகுந்து 50-க்கும் மேற்பட்ட மரக்கிளைகளை உடைத்து சேதப்படுத்தின. மாங்காய்கள், பிஞ்சுகளை உதிர்த்து சேதப்படுத்தின.
இதுபற்றி விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் காலதாமதமாக வந்ததால், விவசாயிகளே பட்டாசுகளை வெடித்து பலமணி நேரம் போராடி யானைகளை காட்டுக்குள் விரட்டி விட்டனர்.
வனத்துறையினர் இதுபோல் இருந்தால் விவசாயிகளின் நிலைமை பரிதாப நிலைக்கு தள்ளப்படும் என குற்றம் சாட்டினர்.
நெற்பயிர் சேதம்
குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள சீனிவாசனின் வாழைத்தோட்டத்தில் நள்ளிரவு 5 காட்டுயானைகள் குட்டியோடு வந்து 150-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.
குலை தள்ளிய வாழைகள் அடுத்த மாதம் அறுவடை செய்யப்பட இருந்ததாகும். அதேபோல் விட்டல் என்பவரின் நெற்பயிரில் புகுந்து காட்டுயானைகள் சேதப்படுத்தின.
வனத்துறையினரும், வருவாய்த்துறையினரும் சேதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story