மாவட்ட செய்திகள்

திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 12 people at a private residence near Thiruporur

திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று

திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமை படுத்தி கொண்டனர். திருப்போரூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை ஒத்துழைப்போடு கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து அனைவருக்கும் பரிசோதனை செய்து வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.அந்த பகுதி முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனாவுக்கு ஒருவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்தார்.
3. தமிழக அமைச்சர் கே மனோ தங்கராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொரோனா வைரச் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
4. ஆந்திராவில் மேலும் 22,018- பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சென்னை விமான நிலையத்தில் கொல்கத்தா செல்ல வந்த 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று; பயணத்தை ரத்து செய்து ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு வழியாக கொல்கத்தா செல்ல வந்த 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்ததால் அவர்களின் பயணத்தை ரத்து செய்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.