வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 April 2021 8:12 PM GMT (Updated: 2021-04-20T01:42:30+05:30)

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.

மணப்பாறை
மணப்பாறையை அடுத்த திருமலையான்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜா. தனியார் பஞ்சாலை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டநிலையில் வீட்டில் இருந்தவர்களும் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர். பின்னர் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை, ரூ.32 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story