மாவட்ட செய்திகள்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்; தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவியை கொன்ற கணவர்; போலீசில் சரண் + "||" + Disorder caused by suspicion of behavior; The husband who killed his wife by throwing a stone at her head; Surrender to the police

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்; தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவியை கொன்ற கணவர்; போலீசில் சரண்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்; தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவியை கொன்ற கணவர்; போலீசில் சரண்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அம்மில்கல்லை போட்டு கொலை
சென்னை நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆலோன் (வயது 51). இவருடைய மனைவி லட்சுமி (45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி, தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.கடந்த 4 ஆண்டுகளாக இந்த வாடகை வீட்டில் ஆலோன் தனது மனைவி லட்சுமியுடன் தனியாக வசித்து வந்தார். ஆலோன் வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். லட்சுமி, வீட்டின் எதிரே பூ வியாபாரம் செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு ஆலோன், திடீரென தனது மனைவி லட்சுமியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். இதில் முகம் சிதைந்த நிலையில் லட்சுமி அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

நடத்தையில் சந்தேகம்
பின்னர் ஆலோன், கோயம்பேடு போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கொலையான லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ஆலோன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆலோன், மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

பிரியாணி வாங்கி கொடுத்தார்
கடந்த 3 நாட்களுக்கு முன்பும் இது தொடர்பாக மனைவியோடு சண்டையிட்டார். இதனால் லட்சுமி, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகன் வீட்டில் போய் தங்கினார்.நேற்று முன்தினம் மாலை மகன் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானம் செய்த ஆலோன், மனைவிக்கு ஆசையாக பிரியாணி வாங்கி கொடுத்தார். பின்னர் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இரவில் லட்சுமி அயர்ந்து தூங்கியதும், அம்மிக்கல்லை அவரது தலையில் போட்டு கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. கொடுங்கையூரில் கட்டிடத்தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை; போலீசில் சகதொழிலாளி சரண்
கட்டிடத் தொழிலாளியை தலையில் கல்லால் அடித்துக்கொலை செய்த சக தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்.