வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்


வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்
x
தினத்தந்தி 29 April 2021 11:39 PM IST (Updated: 29 April 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை, ஏப்.30-
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது22). இவர் புதுக்கோட்டை பூ மார்கெட் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் விஜய் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன்படி விஜய்யை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story