அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் கொரோனாவுக்கு பரிதாபமாக இறந்தார்


அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் கொரோனாவுக்கு பரிதாபமாக இறந்தார்
x
தினத்தந்தி 29 April 2021 8:14 PM GMT (Updated: 29 April 2021 8:14 PM GMT)

அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் கொரோனாவுக்கு பலி

ிருமங்கலம்
திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் தங்கி பணியாற்றி வந்த மெக்கானிக் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த போக்குவரத்து பணிமனையில் நாளொன்றுக்கு 90 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு தங்கியுள்ளனர். கழிவறை பற்றாக்குறை உள்ளதால் ஒரே கழிவறையை அனைவரும் பயன்படுத்துவதால் இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பேருந்துகளை ஓட்டிச் செல்லும்போது இவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பயணிகளை பாதுகாக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சரியாக இருந்தால்தான் பொதுமக்களை பாதுகாக்க முடியும். இத்துடன் இந்த பணிமனையில் பணிபுரிபவர்களுக்கு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் அரசாங்கம். போக்குவரத்து பணிமனையில் ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்க அனுமதிப்பதால் இந்த பிரச்சினை ஏற்படுவதாக பணிமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story