மாவட்ட செய்திகள்

வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம் + "||" + A policeman was killed when his motorcycle collided with a retaining wall near the Vandalur flyover

வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம்

வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம்
வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலியானார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தனர்

சேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலை அருகே உள்ள கோவில் காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 31), இவர் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவரும் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வண்டலூர் மேம்பாலம் அருகே வரும்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன், லேசான காயம் அடைந்த சக்திவேல் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சக்திவேல் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் அருகே சித்தேரிமேடு கிராமத்தில் கடந்த 13-ந்தேதி துரையரசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
2. வழக்கு விவரங்கள் அரசு வக்கீல்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும்; ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் உறுதி
வழக்கு குறித்த விவரங்கள் அரசு வக்கீல்களுக்கு முறையாக தெரியப்படுத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
3. மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
4. கொரோனா அச்சம் காரணமாக ஆவடி போலீஸ் நிலையத்தில் மரத்தடியில் விசாரணை
கொரோனா 2-வது அலை காரணமாக சென்னை மாநகர போலீசில் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 புதிய காவல் ரோந்து வாகனங்கள் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், விபத்து நேரங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் போன்றவை ஏற்படும் போது உடனடியாக சென்று உதவிகள் செய்யவும், ரோந்துப்பணியை சிறப்பாக செய்யவும் ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்டத்துக்கென 5 புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.