ஆத்தூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
ஆத்தூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஆத்தூர்:
ஆத்தூர் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5.45 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக கொளுத்திய வெயிலின் தாக்கம் இந்த கோடை மழை காரணமாக அடியோடு மாறி குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நின்றது. மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனத்தில் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
Related Tags :
Next Story