மாவட்ட செய்திகள்

செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மதிய உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் + "||" + Because lunch is not served Stopping the counting of votes

செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மதிய உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மதிய உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
வாக்கு எண்ணிக்கை நெல்வாய் தனியார் கல்லூரியில் நடந்தது. வாக்கு எண்ணும் பணியில் 80 பேர் ஈடுபட்டிருந்தனர்.
மதுராந்தகம், 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நெல்வாய் தனியார் கல்லூரியில் நடந்தது. வாக்கு எண்ணும் பணியில் 80 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் 35 பேருக்கு மட்டுமே மதிய உணவு வழங்கப்பட்டது. இதனால் அங்கு ஊழியர்கள் அரை மணி நேரமாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர். அரை மணி நேரத்துக்கு பின்னர் வாக்கு எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது.